லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள 'ரஜினிகாந்த்௧171' படத்தில் நடிக்க உள்ள KGF யாஷ்

இளைய தளபதி விஜய் வைத்து லியோ படம் எடுத்துவரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து 'ரஜினிகாந்த்171' படத்தை இயக்க உள்ளார் 


இந்த படம் ரஜின்ஜியின் கடைசி படமாக இருக்க கூடும் என்று சொல்லப்படுவதால் இந்த படத்தை ஒரு பான் இந்தியன் படமாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது , 

இந்த நிலையில் சூப்பர்ஸ்டார் தற்போது நடித்து கொன்று இருக்கும் ஜெயிலர் படம் இந்த வருடம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது, அடுத்ததாக ரஜினிகாந்த அவர்கள் நடிக்கும் 'ரஜினிகாந்த்170' படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்குகிறார் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது இந்த படத்தில் அமிதாப்பச்சன் மற்றும் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 


ரஜினியின் ௧௭௧வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற தகவல் வெளியானது முதல் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள் சமீபத்தில் லோகேஷ் இயக்கிய விக்ரம் படம் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இதனால் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படத்தை தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்,  இந்த நிலையில்  'ரஜினிகாந்த்171' படத்தில் யாஷ் ஒரு மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் இந்த படத்தில் என்னும் எந்த எந்த நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பது இனி வரும் காலங்களில் தெரியவரும். 


Post a Comment

Previous Post Next Post